×

குறுகிய சாலைகளில் சென்று குப்பைகளை சேகரிக்க ரூ.2.2 கோடி நிதியில் 100 பேட்டரி வாகனம்

*இன்று மாதிரி வாகனத்தை பயன்படுத்திட முடிவுதிருச்சி : திருச்சி மாநகராட்சியில் குறுகிய சாலைகளில் சென்று குப்பைகளை வாங்கிட ரூ.2.2 கோடியில் 100 பேட்டரி வாகனம் வாங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் மொத்தம் 65 வார்டுகள் இருக்கிறது. இந்த பகுதிகளில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க லாரிகள், டாட்டா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. துப்புரவு பணிகளில் சுமார் 1200 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லோடு ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முடியாத சாலைகளில் குப்பைகளை சேகரிப்பதில் மாநகராட்சி சிக்கல் நீடித்தது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பேட்டரியில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனம் வாங்கிட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஸ்மார்ட் திட்டதின் கீழ் ரூ.2.2 கோடி நிதியில் 100 பேட்டரியில் இயங்கக்கூடிய வாகனம் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது தனியார் நிறுவனம் சார்பில் மாநகராட்சியின் கூறியுள்ளபடி தயாரிக்கப்பட்ட இரண்டு மாதிரி வானங்களை திருச்சி மாநகராட்சியில் நேற்று காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சி கேட்டுள்ளபடி தயாரிக்கப்பட்ட வாகனத்தை இன்று அல்லது நாளை பரிசார்த்த முறையில் குறுகிய சாலை உள்ள பகுதிகளில் இயக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்பின்பு அந்த வாகனத்தில் ஏதேனும் கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா, குறைகள் ஏதும் இருக்கிறதா? என்பது குறித்து அறியப்படும். பின்னர் அது சரிசெய்யப்பட்ட பின்பு என்ஐடியில் இந்த வாகனத்தை கொடுத்து மூன்றாம் தரப்பு ஆய்வு அறிக்கை கேட்கப்படும். அவர்கள் இந்த வாகனத்தில் குறைகள் இருக்கிறதா என ஆய்வு செய்வார்கள், அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பின்பற்றி பேட்டரி வாகனத்தில் திருத்தங்கள் தேவைப்படின் மேற்கொள்ளப்படும். அதன்பின்பு மாநகராட்சி பயன்பாட்டிற்கு அந்த வாகனம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் முடிவடைந்து பேட்டரி வாகனம் திட்டம் மாநகராட்சியில் அமல்படுத்தப்படும் என மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது….

The post குறுகிய சாலைகளில் சென்று குப்பைகளை சேகரிக்க ரூ.2.2 கோடி நிதியில் 100 பேட்டரி வாகனம் appeared first on Dinakaran.

Tags : Trichy Municipality ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்